என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்து பெண்
நீங்கள் தேடியது "இந்து பெண்"
பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. #sumankumari #firsthinduwomanjudge
இஸ்லாமாபாத்:
இதுகுறித்து சுமன் குமாரியின் தந்தை பவன் குமார் போதான் கூறுகையில், ‘கம்பார் ஷாதத்காட் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க சுமன் விரும்புவார். தற்போது முக்கிய மற்றும் பொறுப்புள்ள பதவி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் நேர்மை மற்றும் கடின உழைப்பினால் முன்னேறுவார் என நம்பிக்கை உள்ளது’ என கூறினார்.
இந்து சமூகத்தில் ஏற்கனவே ராணா பகவான்தாஸ் என்பவர் 2005-2007 கால கட்டத்தில் நீதிபதியாக இருந்தார். இவரே பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் முதல் நீதிபதி பொறுப்பு வகித்தவர் ஆவார். இதனையடுத்து தற்போது முதல் முறையாக ஒரு இந்துப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் இந்து மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #sumankumari #firsthinduwomanjudge
பாகிஸ்தானில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக இந்து பெண் சுமன் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். சுமன், கம்பார் ஷாதத்காட் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஐதராபத்தில் சட்ட இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் கராச்சியின் சபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டம் பெற்றார்.
இதுகுறித்து சுமன் குமாரியின் தந்தை பவன் குமார் போதான் கூறுகையில், ‘கம்பார் ஷாதத்காட் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க சுமன் விரும்புவார். தற்போது முக்கிய மற்றும் பொறுப்புள்ள பதவி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் நேர்மை மற்றும் கடின உழைப்பினால் முன்னேறுவார் என நம்பிக்கை உள்ளது’ என கூறினார்.
இந்து சமூகத்தில் ஏற்கனவே ராணா பகவான்தாஸ் என்பவர் 2005-2007 கால கட்டத்தில் நீதிபதியாக இருந்தார். இவரே பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் முதல் நீதிபதி பொறுப்பு வகித்தவர் ஆவார். இதனையடுத்து தற்போது முதல் முறையாக ஒரு இந்துப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் இந்து மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #sumankumari #firsthinduwomanjudge
இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #HinduGirl #AnanthKumarHegde
பெங்களூரு:
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி ஆக்ரோஷமாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
இந்த நிலையில் குடகு மாவட்டம் மாதாபுராவில் நேற்று இந்து அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், குடகில் மறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அத்தகைய தேச துரோகிகளுக்கு இங்கு இடம் தரக்கூடாது. அவர்கள் இங்கு வந்தால், மண்ணோடு மண்ணாக்குங்கள். இந்து பெண்களின் உடலை யாராவது தொட்டால், அவர்களின் கையை வெட்டுங்கள்.
இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.
அனந்தகுமார் ஹெக்டேயின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் மதுசூதன் கூறுகையில், ‘அனந்தகுமார் ஹெக்டே இவ்வாறு பேசியது தவறு. அவரது பேச்சுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. இதை பா.ஜனதா நியாயப்படுத்தாது’ என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா எம்.பி. கூறுகையில், ‘அனந்தகுமார் ஹெக்டே கூறிய கருத்து தவறானது. அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார் என்பதை இது காட்டுகிறது. அவரை மந்திரிசபையில் இருந்து மோடி நீக்க வேண்டும்’ என்றார். #HinduGirl #AnanthKumarHegde

×

X